நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விஷால் செய்த உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து பெப்சி அமைப்பினர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலர் லட்சக்கணக்கில் உதவி செய்தனர். மேலும் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்கு நிதியுதவி மட்டுமின்றி ஒரு சில நடிகர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்களையும் வழங்கி வந்தார்கள் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள சென்னையை சேர்ந்த 1500 பேருக்கு நடிகர் விஷால் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்து உதவியுள்ளார். இந்த பொருட்களை நடிகர் ஸ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மட்டுமன்றி வெளியூரில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் மளிகை பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். விஷாலை அடுத்து மேலும் சில நடிகர்கள் நலிந்த நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com