விவசாயிகளுக்கு விஷால் செய்த மிகப்பெரிய உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ஏற்கும்போது தன்னுடைய படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். 'துப்பறிவாளன்' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் இருந்து கிடைத்த லாபமான ரூ.11 லட்சத்தை 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். இந்த பணத்தை விவசாயிகளுக்கு இயக்குனர் பாண்டிராஜ் தனது கையால் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த விழாவில் பேசிய நடிகர் விஷால், 'இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம். நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி செய்து அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்' என்று கூறினார்.
இயக்குனர் பாண்டிராஜ் பேசியபோது, 'விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout