ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் கேட்ட சின்னம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்த நடிகர் விஷால் இன்று தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செய்த பின்னர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனுவில் 'விசில்' சின்னத்தை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'தொப்பி' சின்னம் கிடைக்காத பட்சத்தில் டிடிவி தினகரனும் இதே விசில் சின்னத்தை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று விஷால் வேட்புமனு தாக்கல் செய்ய பைக்கில் வருகை தந்தார் என்பதும் கூடுதல் செய்தி.

மேலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிக சுயேட்சை வேட்பாளர்கள் வந்திருந்ததால் விஷால் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. விஷாலை போலவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வரிசையில் நின்று இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.