அல்வா வாசு குடும்பத்திற்கு விஷால் செய்த உதவி

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

சமீபத்தில் மரணம் அடைந்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு அவர்களின் குடும்பத்தினர் வறுமையின் பிடியில் இருப்பதால் அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவிற்கு நடிகர் சங்கம் உதவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது தேவி அறக்கட்டளையில் இருந்து அல்வா வாசுவின் மகள் படிப்பு செலவிற்காக ரூ.1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். விஷாலின் இந்த உதவிக்கு அல்வா வாசு குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் சங்கத்தில் இருந்தும் மேலும் சில உதவிகள் அவருடைய குடும்பத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அல்வா வாசு உடல்நலமின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடிகர் சங்கத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் மருத்துவ செலவிற்காக நிதியுதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று முதல் ஷங்கரின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

புளூவேல் கேமிற்கு அடிமையான சென்னை கல்லூரி மாணவி: 7வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு

சிறுவர், சிறுமிகளின் உயிர்களை பறிக்கும் ஆபத்தான் ஆன்லைன் கேம் புளுவேல் கேம் என்பதும் இந்த ஆபத்தான விளையாட்டால் சமீபத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் பலியானார் என்று வெளிவந்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்...

நான் முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது: நாஞ்சில் சம்பத்

அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்தால் ஆட்சி மேலும் வலுப்பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் தற்போதுதான் ஆட்சிக்கு மேலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அஜித்திடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது: 'விவேகம்' கலை இயக்குனர் மிலன்

ஒரு சர்வதேச உளவாளி படத்தை சர்வதேச தரத்துடன் காட்சியில் கொண்டு வருவது அவ்வளவு எளிது இல்லை. சர்வதேச தரத்தை கொண்டுவர கதைக்கு தகுந்தவாறும் கேரக்டர்களுக்கு தகுந்தவாறும் தொழில்நுட்ப கலைஞர்களின் அதிகபட்ச உழைப்பு தேவைப்படும்.

கமல்ஹாசனுடன் விவசாய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிரடி அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.