தேர்தலில் தோல்வி அடைந்த மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த புதிய பதவி
Tuesday, April 4, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் நம்ம அணியினர் பெருவாரியாக வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றினர். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மிஷ்கின் மட்டுமே நம்ம அணியின் தோல்வி அடைந்த வேட்பாளர் ஆவார். ஆனாலும் மிஷ்கினுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முக்கிய பதவி ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: `எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம், ஒரு தனி மனிதனுக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. வரும் வியாழக்கிழமை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
தயாரிப்பாளர்கள் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார்.
தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும். தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதே போல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்` இவ்வாறு விஷால் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments