இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த விஷால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’துப்பறிவாளன்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு வெளி வந்தது என்பதும் 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து விஷால் இந்த படத்தின் மீதி பகுதியை தானே இயக்க இருப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் விஷால் இயக்கும் முதல் படமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஜனவரி மாதம் முதல் ’துப்பறிவாளன் 2’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் ஏப்ரல் மாதம் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் மீண்டும் உயிர்ப்பெற உள்ளது என்பதை அடுத்து விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஷால், பிரசன்னா, ஆயிஷா, ரகுமான், நாசர், ஜெயப்பிரகாஷ், கௌதமி, சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Geared up for the Mega HUNT!!!
— Vishal (@VishalKOfficial) December 6, 2021
All set for the recce of #Thupparivaalan2 this #Jan2022 in #London.
Shoot to commence from #April2022.GB#Thupparivaalan2#Detective2#DirectionalDebut#ForeignCrew pic.twitter.com/VviuFFqAJi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments