ஜெயலலிதா நினைவு தினம்: விஷால் மரியாதை

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தி ஆனதை அடுத்து இன்று காலை முதல் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மாலை, மரியாதை செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் இன்று ஜெயலலிதா சமாதி முன் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்களில் விஷாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சேரனின் செயல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை: விஷால்

இயக்குனர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

ஸ்கூபா விளையாடிய போது விபரீதம்: இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் பலி

அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குனராக செயல்பட்டு வந்த 49 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், ஸ்கூபா விளையாடியபோது சுறா மீன் தாக்கியதால் பரிதாபமாக பலியானார்.

மணிரத்னம்-சிம்பு படம் என்ன ஆச்சு? 

சமீபத்தில் சிம்பு மீது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கடுமையான புகார்களை பத்திரிகையாளர் முன் பதிவு செய்தனர்.

தமிழகத்தை நோக்கி மீண்டும் புயலா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதாவது இன்றும் நாலையும் கனமழை பெய்யும்