விஷாலின் 5 மொழி திரைப்படம்: பூஜையுடன் இன்று தொடக்கம்!

  • IndiaGlitz, [Thursday,May 05 2022]

விஷால் நடிக்கும் ஐந்து மொழி திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் இன்றே ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’எனிமி’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஹீரோவாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏற்கனவே நடிகர் எஸ்ஜே. சூர்யா மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம் என்றும் அந்த அளவுக்கு அருமையான கதை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்தது போன்ற செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் இந்த செட்டை கலை இயக்குனர் உமேஷ் அமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.