தேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா? ஐகோர்ட்டில் விஷால் மனு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக பதிவாளர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது விஷாலின் பாண்டவர் அணியினை அதிர்ச்சி அடைய செய்தது
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்திய பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை விஷால் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கையில் பதிவாளர் தலையிட அதிகாரம் இல்லை என்றும், தேர்தலை நிறுத்தியதன் மூலம் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நாளைக்குள் இந்த மனு விசாரிக்கப்பட்டு வரும் ஞாயிறு அன்று தேர்தலை நடத்த வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout