82 வயதில் விஷால் தந்தைக்குக் கிடைத்த பெருமைக்குரிய பதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி அவர்களுக்கு 82 வயதில் பெருமைக்குரிய பதவி கிடைத்தது குறித்து விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி அவர்கள் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் விருப்பம் உள்ளவர் என்பதும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முறையான உடற்பயிற்சி செய்வது எப்படி என்பது குறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பதும் அந்த வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் ஜிம்கள் அனைத்தும் மூடி இருந்த நிலையில் அவருடைய உடற்பயிற்சி குறிப்புகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்று முன் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தை ஜிகே ரெட்டி அவர்கள் ’பிட் இந்திய மிஷன்’ என்ற அமைப்பின் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து தனது தந்தையை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் இந்த 82 வயதிலும் அவர் தனது உடல் நலத்தை பேணி காத்து வருவது எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருப்பதாகவும் அவர் அம்பாசிடராக பதவி ஏற்பதன் மூலம் பலரும் தங்கள் உடலை பிட்டாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Super happy that my Dad #GKReddy has been nominated as #FitIndiaAmbassador
— Vishal (@VishalKOfficial) September 3, 2021
Hats off to U & your consistency in Fitness even now @ the age of 82,U have always Inspired Me,I am sure U will Inspire many more to become Fitter,Stronger & lead a Healthy Lifestyle
Always Proud of U,GB pic.twitter.com/G7C4x8vTLI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments