சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மன்ற செயலாளர் புகார்
- IndiaGlitz, [Thursday,January 12 2017]
நடிகர் விஷால் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இணையதளம் ஒன்று விஷால் குறித்து அவதூறான செய்தி வெளியிட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 'தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்கும் விதத்தில் விஷால் தவறாக எதுவும் கூறாத நிலையில், குறிப்பிட்ட இணையதளம் ஒன்று தவறான செய்தியை தொடர்ந்து வெளியிட்டு அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி செல்போன் முலம் முகம் தெரியாத நபர்கள் சிலர் விஷாலை தவறான வார்த்தைகளை பேசி வருவதாகவும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.