முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது உண்மையா? விஷால் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஈடுபட முயற்சித்தார். இந்த நிலையில் திடீரென அவர் ஆந்திர மாநில அரசியலில் குதிக்க இருப்பதாகவும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு போட்டியிடும் குப்பம் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின.
இந்த நிலையில் இந்த செய்திக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டு குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. ஆந்திர மாநில அரசியலில் ஈடுபடும்படி என்னை யாரும் அணுகவில்லை. இந்த வதந்தி எப்படி மிக வேகமாக பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை.
என்னுடைய கவனம் முழுவதும் புதிய படங்களில் நடிப்பதில் மட்டுமே உள்ளது. எந்த காலத்திலும் ஆந்திரப் பிரதேசம் மாநில அரசியலில் ஈடுபடும் எண்ணமோ அல்லது சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ எனக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
— Vishal (@VishalKOfficial) July 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments