மருத்துவமனையில் அனுமதியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

நடிகர் விஷால் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான நோய் என்பது தெரியவில்லை என்றும் பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் கடந்த சிலநாட்களாக பரவி வந்தது

இந்த நிலையில் 'அவன் இவன்' படத்தில் விஷால் மாறுகண் வேடத்தில் மிகுந்த சிரமப்பட்டு நடித்தபோது அவருக்கு கண் மற்றும் மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கு சிகிச்சை செய்யவே அவர் கலிபோர்னியா சென்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை நாம் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்றுமுன் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நான் முற்றிலும் நலமுடன் உள்ளேன். எனக்கு ஏற்பட்ட ஒற்றை தலைவலி காரணமாக கிச்சை பெற்று தற்போது ஓய்வு எடுத்து வருகிறேன். வரும் மார்ச் முதல் வாரத்தில் நான் வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார். விஷாலின் இந்த விளக்கத்தை அடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.

 

More News

குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம்: என்ன சொல்கிறது டேட்டா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது.

பொது மேடையில் இரண்டு காமெடி நடிகர்களுக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தமிழர்களிடையே புகழ் பெற்ற ஓவியா, அந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆனபோனதிலும் இன்னும் சமூக வலைத்தள டிரெண்டில் உள்ளார்

இந்தியாவுக்கு ஸ்ரீதேவி உடல்: துபாய் காவல்துறை முக்கிய அறிவிப்பு

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றே இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துபாய் காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டது.

உண்மையை தெரிந்து கொண்டு எழுதுங்கள்: சீமானுடன் நடிப்பது குறித்து குஷ்பு

சென்னையை சேர்ந்த சமூக போராளி டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்றில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார்

சிரியா போருக்கு யார் காரணம்? பின்னணி என்ன? அதிர்ச்சி தகவல்

சிரியாவில் ஆட்சி செய்யும் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த பல வருடங்களாக போர் புரிந்து வருகின்றனர். இந்த போரில் சமீபத்தில் கூட சுமார் 500 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்