நீதிமன்ற உத்தரவுக்கு பின் திறக்கப்பட்ட அலுவலகத்தில் விஷால்
- IndiaGlitz, [Friday,December 21 2018]
தயாரிப்பாளர் சங்கம் நேற்று வட்டாட்சியர் அவர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் விஷால் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது
விஷால் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
தெரிவித்தது. மேலும் தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திற்குள் நுழைய விடாதது ஏன்...? என்றும்,
தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டு போட யார் அதிகாரம் கொடுத்தது...?
என்றும் நீதிபதிகள் கேள்வி எழுபினர்.
இந்த பிரச்சினைகளை நீதிமன்றம் மூலமாகவே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும் என்றும்,
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட விஷாலின் பதவி காலம் இன்னும் முடிவடையாத நிலையில் அவரை சங்கத்திற்குள் அனுமதிக்காதது ஏன்...? என்றும்
விஷால் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது தாசில்தார் சீல் வைத்தது ஏன்...??? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்
மேலும் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு. பிறப்பித்து அனைத்து ஆவணங்களையும் சங்கங்களின் துணை பதிவாளரிடம் ஒப்படைக்கவும் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவு பிறப்பித்தார்
இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை திறந்து உள்ளே சென்றார் விஷால். அவருடன் விஷாலின் வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது