அந்த மாயாஜாலம் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

நடிகர் விஷால் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரிலீஸ் ஆகி 18 ஆண்டுகள் ஆகியதை அடுத்து இந்த மாயாஜால வெற்றி கிடைத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அதாவது 18 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளித்திரையில் ’சண்டக்கோழி’ என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக என் வாழ்க்கை உருவாகியது. தற்போது நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்லவே முடியாது

இன்று வரை அனைவராலும் பொழிந்த அன்பும் பாசமும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் எனக்கு தொடர்ந்து கொண்டிருப்பது கொண்டிருப்பதற்கு இந்த படம் ஒரு முக்கிய காரணம். பார்வையாளர்களில் ஒருவனாக இருந்த என்னை இந்த படம் திரும்பி பார்க்க வைத்தது. என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குனர் லிங்குசாமி மற்றும் கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இறுதியாக பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்த ரசிகர்களை நான் கடவுளாக பார்க்கிறேன். அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். என் தந்தை ஜிகே ரெட்டி, எனது குரு அர்ஜுன் சார் ஆகியோர்களின் கனவை தொடர்வேன். நன்றி மட்டும் போதாது என்று எனக்கு தெரியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

விஷாலின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

என் காதுலயே பூ வைக்குறீங்களா? பூர்ணிமாவை வறுத்தெடுத்த கமல்ஹாசன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவை வறுத்தெடுத்த காட்சியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வாரம் சனி, ஞாயிறு என இரண்டு எவிக்சனா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு எலிமினேஷன் இருக்கும் என்ற நிலையில் இந்த வாரம் மட்டும் திடீரென மிட்வீக் எலிமினேஷன் என அனன்யா வெளியேற்றப்பட்டார்.

மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் வேதனை..!

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரால் நிமிர்ந்து உட்கார முடியாத அளவிற்கு அவர் இருந்ததை

ரஜினியை சந்தித்த சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம்.. படம் தயாரிக்க திட்டம் என தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம் ஒருவர் சந்தித்ததாகவும் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேஷம் கலைந்தது.. சாயம் வெளுத்தது.. இந்த வாரமும் ரவுண்டு கட்ட போகும் கமல்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கடந்த வாரம்  தினேஷ், அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார் என்பதும்  அதன் பிறகு அவர்கள் ஓரளவு திருந்தி இருப்பதாக தெரிகிறது