விஷாலின் அடுத்த அதிரடி. தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடி கும்பல் கைது

  • IndiaGlitz, [Monday,July 04 2016]

நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவியை ஏற்றதில் இருந்தே திருட்டு டிவிடிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில்கூட கும்பகோணத்தில் தனியார் கேபிள் டிவி ஒன்று உதயநிதியின் 'மனிதன்' படத்தை ஒளிபரப்பியதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட விஷால் காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இதேபோல் தமிழகம் முழுவதும் திருட்டு டிவிடியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று திருட்டு வீடியோ பைரசி தடுப்பு சோதனை தமிழ்நாடு முழுவதும் ATGB Sunil Kumar IPS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறிப்பாக Sunil Kumar IPS அவர்களின் உத்திரவின் பேரில் கோயம்புத்தூர் பகுதியின் S.P கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வுக்கு சென்றுள்ளார். நாள் முழுவதும் நடத்திய வேட்டையில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 25 கடைகளின் உரிமையாளர்களை அவர் கைது செய்துள்ளார்.
இதேபோல் மதுரையில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 16 கடையின் உரிமையாளர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை ATGB Sunil Kumar IPS உத்திரவின் பேரில் எஸ்.பி. ஜெயலக்ஷ்மி IPS அவர்களின் நேரடி பார்வையில் டி.எஸ்.பி நீதிராஜன் மற்றும் ஆய்வாளர்கள் திருமதி. ராஜேஷ்வரி மற்றும் பாலமுருகன் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.

More News

மணிரத்னம் - கார்த்தி படம் தொடங்கும் தேதி

'தோழா' வெற்றி படத்திற்கு பின்னர் 'காஷ்மோரா' படத்தில் நடித்து முடித்த கார்த்தி தற்போது தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள...

'தெறி' - 'விஜய் 60'. ஒரு அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. ரூ.150 கோடி வசூல் செய்து விஜய் படங்களில் அதிகவசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது...

'கபாலி' புரமோஷனில் இந்தியாவின் பிரபல வங்கி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் ஃபைவ் ஸ்டார்...

'24' ஆத்ரேயாவின் வீல்சேர் என்ன ஆனது தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த '24' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவின் ஆத்ரேயா கேரக்டருக்கு அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது

இந்த அதிசயம் நடக்குமா? ஒரே படத்தில் விஜய்-மகேஷ்பாபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள 'சங்கமித்ரா' என்ற படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.