லைகா கொடுக்கும் ரூ.5 லட்சம் அபராதத்தொகையை இதற்கு செலவு செய்ய போகிறேன்: விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
’சக்ரா’ பட வழக்கு சம்பந்தமாக லைகா நிறுவனம் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் பொய்யான வழக்கை பதிவு செய்ததாக லைகா நிறுவனத்திற்கு ரூ 5 லட்சம் அபராதம் விதித்து சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் விஷாலுக்கு வரப்போகும் இந்த ஐந்து லட்ச ரூபாயை அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வழக்கு செலவாக ரூபாய் 5 லட்சம் விஷாலுக்கு தரவேண்டும் என லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தொகையை ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கல்வி செலவுக்காக பயன்படுத்தப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் ஏற்கனவே நடத்திவரும் தேவி அறக்கட்டளை மூலமாக இந்த ஐந்து லட்சம் ரூபாயை மாணவ மாணவிகளின் படிப்பு செலவுக்கு முழுமையாக பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் ’எனிமி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் து.பா. சரவணன் இயக்கி வரும் படமொன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments