சட்ட நிபுணர்களுடன் விஷால் அவசர ஆலோசனை: வழக்கு தொடர்வாரா?

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு விஷால் தரப்பினர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விஷால் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். 

வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரிடம் விஷால் முறையிடப்போவதாகவும் தகவல் வந்துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி கொடுக்கும் விளக்கத்திற்கு பின்னர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள விஷாலின் இல்லத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீர் மரணம்

கார்த்திக் நடித்த 'அமரன்' படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான பிரபல இசையமப்பாளர் ஆதித்யன் இன்று அமரரானார். அவருக்கு வயது 54

விஷாலுக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இயக்குனர் அமீர்

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளிவந்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் திரையுலக பிரமுகர் இயக்குனர் அமீர் என்பது தெரிந்ததே.

தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விலகியது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் இந்த ராஜினா என்று ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

'வேலைக்காரன்' கேரக்டர்களின் பெயர்கள் அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்

ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை : விஷால் வேட்புமனு குறித்து திருமாவளவன்

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் விஷாலின் அதிரடியை பார்த்து ஐம்பது வருட பாரம்பரிய திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடைந்து அவரது வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே