சட்ட நிபுணர்களுடன் விஷால் அவசர ஆலோசனை: வழக்கு தொடர்வாரா?

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு விஷால் தரப்பினர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விஷால் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். 

வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரிடம் விஷால் முறையிடப்போவதாகவும் தகவல் வந்துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி கொடுக்கும் விளக்கத்திற்கு பின்னர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள விஷாலின் இல்லத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.