நட்சத்திர கிரிக்கெட்: அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று முடிந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி ரசிகர்களை கவர்ந்ததோ இல்லையோ இந்த போட்டி குறித்து எழுந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஏராளம். நட்சத்திர போட்டி தோல்வி அடைந்ததாகவும், தமிழக மக்கள் குறித்து தனுஷ் மற்றும் விஷால் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறியதாகவும் ஒரு செய்தி வெளிவந்து பின்னர் அது சம்பந்தப்பட்டவர்களால் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் அஜித்தின் பாடல் ஒலித்தபோது அந்த பாடலை நிறுத்தும்படி விஷால் கூறியதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விஷால் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பார்ட்டி நடைபெற்ற போது சக்திவாய்ந்த சோடியம் விளக்கில் இருந்து வெளிச்சம் அதிகமாக வந்ததாகவும், அந்த விளக்கை நிறுத்தும்படி விஷால் கூறியதை பாட்டை நிறுத்தும்படி கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாகியுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விஷாலும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments