நடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என்றும் அந்தத் தேர்தலுக்கு பதிலாக புதிய தேர்தல் இன்னும் மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பளித்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து வரும் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்யப்போவதாக பாண்டவர் அணியின் விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார். எனவே நடிகர் சங்க தேர்தல் வழக்கு இன்னும் நீண்டு கொண்டே செல்லும் போல் தெரிகிறது

இந்த நிலையில் மேல்முறையீடு செல்லாமல் புதிய தேர்தலை விஷால் அணியினர் சந்திக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘விஷால் அணி காலதாமதமாக தேர்தல் நடத்தியது தவறு என்றும் அந்தத் தேர்தலில் நிறைய குளறுபடிகள் இருந்ததாகவும் கூறினார்

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் அந்த வழக்கு முடிய மூன்று வருடங்கள் ஆகிவிடும் என்றும் எனவே மேல்முறையீடு செல்லாமல் விஷால் அணியினர் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ராதாரவியின் கோரிக்கையை விஷால் அணியினர் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா? பரபரப்பு தகவல்!

உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்' என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை திரிஷா. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவிக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி  மாணவி ஒருவர் கனடாவில் படித்துக்கொண்டிருந்தபோது அவரை மர்ம மனிதன் ஒருவன் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபுதேவா நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கிய 'பொன்மாணிக்கவேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே

நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

சினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவரும்