விஷாலின் டேட்டிங் அனுபவமும் மீடூ பிரச்சனைகளும்

  • IndiaGlitz, [Sunday,November 11 2018]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக மீடூ பிரச்சனை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் 'சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளதாகவும், இருவரும் மனமொத்து பழகுவதற்கும், ஒருவரை தவறாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த திரைத்துறையாக இருந்தாலும் நடிகைகள் பயமின்றி பாதுகாப்புடன் பணிசெய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய விஷால், 'தன்னுடைய முதல் படத்தில் இருந்து 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்த இரண்டு நாயகிகள் வரை நடிகைகள் பாதுகாப்பாக பணி செய்ததாக கூறினார்

மீடூ என்பது பெண்களிடம் தவறாக நடப்பவர்களை வெளிக்காட்டும் ஒரு அம்சம் என்றாலும் ஒருசிலர் இதனை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், காலம் தாழ்ந்து குற்றச்சாட்டு கூறுதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலை மாற வேண்டும் என்றும் கூறினார்.