மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியா? விஷால் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷாலின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சங்கத்திற்கு என தனி அதிகாரியை நியமித்துள்ளது. இதனை எதிர்த்து விஷால் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில், 'மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமே என்று கூறியுள்ளார். மேலும் சங்கத்தின் நிர்வாக பதவியில் இருந்து கொண்டு எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் முடிவுகள் எடுக்க முடியாது என்றும், தமிழக அரசு தனி அதிகாரி விஷயத்தில் காட்டிய அக்கறையை பைரசி விஷயத்தில் காண்பித்திருக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தான் உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த விஷால், 'சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் படத்தின் கதை நன்றாக இல்லை என்றால் ஓடாது. நாலு பேர் மட்டுமே தியேட்டரில் இருந்தால் அந்த படத்தை இரண்டு வாரங்கள் ஓட்டுங்கள் என்று தியேட்டர் உரிமையாளரை எப்படி நிர்ப்பந்திக்க முடியும்' என்றும் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே பதவியில் உள்ளவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விஷால் மீண்டும் நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com