சிம்பு, விஷால் உறவில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது சிம்பு மற்றும் விஷால் எதிரெதிர் அணியில் போட்டியிட்டு ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்தனர். அதற்கு பின்னரும் இருவரும் கருத்து மோதல்கள் கொண்டிருந்ததாகவும், தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு பல இடைஞ்சல்கள் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிம்புவும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினர்களும் வெளிப்படையாக பேச வேண்டும், எல்லா விஷயமும் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்று சிம்பு கூறிய கருத்துக்கு விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்திற்கு சிம்பு வருகை தந்து தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தது குறித்து விஷால் தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டார். நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் சிம்பு, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்துடனும், விஷாலுடனும் இனிவரும் காலங்களில் இணக்கமான உறவை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.