வெட்கமே இல்லாமல் இப்படி செய்யலாமா நீங்கள்? எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண குடிமகனுக்கே இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியபோது பைரஸியை ஒழிக்க பாடுபடும் விஷாலுக்கு அதிர்ச்சி இருக்காதா? ஆன்லைன் பைரஸியை தடுக்க வேண்டிய ஆளும் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரே ஆன்லைனில் படம் பார்த்தது குறித்து விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எச்.ராஜா அவர்களுக்கு, மக்கள் அறிந்த தலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி பைரஸியை ஆதரிக்கின்றீர்கள்? உங்களை போன்ற அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும் எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் இருக்கும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.
இது மிகவும் தவறான முன்னுதாரணம், இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு பைரஸியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார்.,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments