சமாதானத்திற்கு தயாரா? விஷாலின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,October 08 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவை இந்த சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் சற்று முன்னர் பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளித்த விஷால், 'நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை. தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இந்த தர்மயுத்தம் நடந்தே தீரும். எந்த காரணத்தை முன்னிட்டும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

விஷாலின் இந்த பேட்டியை அடுத்து தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் மீண்டும் சமாதான முயற்சியில் ஈடுபடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும்...

நடிகர் சங்க தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் ...

சமாதான பேச்சுவார்த்தை குறித்து பாண்டவர் அணி எடுத்த முக்கிய முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும்...

விஜய்யின் 'புலி'க்கு கைகொடுத்த பிரபல இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

ராதிகாவின் கேள்விகளுக்கு பொன்வண்ணன் பரபரப்பு பதில்

நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரு அணியினர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியும்...