சமாதானத்திற்கு தயாரா? விஷாலின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு ஆகியவை இந்த சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் சற்று முன்னர் பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளித்த விஷால், 'நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை. தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இந்த தர்மயுத்தம் நடந்தே தீரும். எந்த காரணத்தை முன்னிட்டும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
விஷாலின் இந்த பேட்டியை அடுத்து தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் மீண்டும் சமாதான முயற்சியில் ஈடுபடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com