தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்துறையில் புகாரளித்த விஷால்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்பி செளத்ரி மீது நடிகர் விஷால் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சற்று முன்னர் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மீது காவல்துறை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தயாரிப்பாளரிடம் தான் கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை திருப்பி செலுத்திய பின்னரும் தான் கடனுக்காக கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி திரும்பிவரவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளதாக தெரிகிறது. இந்த புகார் குறித்து காவல்துறை ஆணையர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி மகனும் நடிகருமான ஜீவாவும் விஷாலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற நிலையில் தற்போது ஆர்பி சவுத்ரி மீது விஷால் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.