காவல்துறை உயரதிகாரிகளுடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,October 30 2016]

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக நடிகர் விஷால் பதவியேற்றதில் இருந்து நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது தனது தேவி அறக்கட்டளை மூலம், தனது சொந்த பணத்தில் இருந்தும் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தீபாவளி தினத்தை அனைத்து நாட்களிலும் தன் நலம் பாராமல் மக்கள் பணியில் கடமையுடன் செயல்படும் அன்புமிக்க காவல்துறை நண்பர்களுடன் தித்திக்கும் தீபாவளியை நேற்று விஷால் கொண்டாடியுள்ளார். இதற்கு காவல்துறையினர் மத்தியில் விஷாலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு முன்பே நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தீபாவளி பரிசு கொடுத்து அனைவரின் நன்மதிப்பை விஷால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.