பிறந்த நாளில் விஷால் செய்த சிறப்பான செயல்: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Sunday,August 29 2021]

பிரபல நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இன்று அதிகாலை முதலே விஷாலின் பிறந்தநாள் குறித்து ஹாஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளின் போது மெர்சி ஹோமில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தனது கையாலேயே உணவு வழங்கினார். மேலும் சுரபி இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் குழந்தைகளுடன் அவர் உட்கார்ந்து உணவு அருந்தியோடு குழந்தைகளுக்கு அவர் உணவு ஊட்டினார். இந்த நிகழ்ச்சியில் விஷாலின் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளில் விஷால் செய்த இந்த சிறப்பான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் விஷால் நடித்து வரும் 31வது திரைப்படமான ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷால் நடித்து முடித்துள்ள ’எனிமி’ திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அவர் நடித்து வரும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.