கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு விஷால் செய்த கெளரவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை இழந்தது. இருப்பினும் வீராங்கனைகள் எடுத்த முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மிதாலிராஜ் அவர்களை கெளரவிக்கும் வகையில் அவருக்கு JFW விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கலந்து கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலுமு முன்கூட்டியே தயார் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக தயார் செய்துவிட்டு வந்துள்ளேன். கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் மீது நான் வைத்துள்ள மதிப்பும் மரியாதை காரணமாக நான் என்னை தயார்படுத்தி இந்த விழாவில் கலந்துள்ளேன். நான் அவருடைய தீவிர ரசிகராக இருப்பதற்கு அவருடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மட்டும் காரணம் இல்லை. இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக மேப்பில் இடம்பெற செய்த அவரது தீவிர முயற்சிக்கும் சேர்த்துதான் ரசிகரானேன். அவர் பல இளம்பெண்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் ஒரு நபராக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி' என்று விஷால் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com