மோகன்லாலை அடித்துவிட்டு சாரி கேட்ட விஷால்

  • IndiaGlitz, [Wednesday,November 29 2017]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் விஷால் நடித்த 'வில்லன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து விஷால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு பெரிய ஸ்டாருடன் இந்த படத்தில் நடித்ததால் ஆரம்பம் முதலே ஒருவித பதட்டத்துடன் இருந்தேன். இப்பொழுதுதான் முதல் படம் நடிப்பது போல் இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நான் மோகன்லாலை அடிக்க வேண்டிய காட்சி இருந்தது. இந்த காட்சியில் நடிக்க எனக்கு மிகவும் தயக்கமாக இருந்ததை உணர்ந்து கொண்ட மோகன்லால் எனக்கு ஊக்கம் அளித்தார். இருப்பினும் இந்த காட்சியில் ஒருவித பயத்துடனே நடித்தேன்.

மோகன்லாலை அடித்துவிட்டு ஷாட் முடிந்தவுடன் அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் இதெல்லாம் சகஜம் தான் என்று எனக்கு ஆறுதல் அளித்தார். அவருடன் நடித்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது' என்று விஷால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்