இதை தமிழ்ப்படத்திற்கும் செய்யலாமே? தியேட்டர் அதிபரிடம் கேள்வி எழுப்பிய விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' இன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் 3Dயில் வெளியாகியுள்ள இந்த படத்தை அதிகாலை ஐந்து மணி காட்சியில் இருந்து ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் முக்கிய காட்சிகளை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்கவும். அனைவரும் தங்கள் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து படத்தை ரசிக்கவும் என்று பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகர் விஷால், 'இது நல்ல விஷயம் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆங்கில படத்திற்கு செய்வது போல் அடிக்கடி வெளியாகும் தமிழ் படத்திற்கும் இதேபோல் செய்யலாமே' என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த வெற்றி திரையரங்கின் உரிமையாளர், 'எங்களுக்கு சினிமாவில் மொழி பேதம் கிடையாது. நாங்கள் எப்போதும் பைரஸிக்கு எதிரானவர்கள்' என்று கூறியுள்ளார்.
Huh??? Well well well. Finally. I would expect this for Tamil movies which flow in week afta week than English films that come in once a year.
— Vishal (@VishalKOfficial) April 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments