படம் தயாரிக்காத வெற்று தயாரிப்பாளர்களே.. முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்: விஷால் பதிலடி..!
- IndiaGlitz, [Saturday,July 27 2024]
நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியான நிலையில் சில மணி நேரத்தில் நடிகர் விஷால் படம் தயாரிக்காத வெற்று தயாரிப்பாளர்களே, முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாக இருந்த போது 12 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து பேச வேண்டும் என்று அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் ’கதிரேசன் உள்ளிட்டவர்கள் உங்கள் குழுவில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும், நீங்கள் சொன்னதாக கூறப்பட்ட அந்த நிதியை தயாரிப்பாளர் சங்கத்தில் நலிந்த மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது என்று உங்களுக்கு தெரியாதா?
திரையுலகில் ஏற்கனவே நிறைய பணிகள் உள்ளன, அதில் கவனம் செலுத்த வேண்டும், இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
நான் தொடர்ந்து நடிப்பேன், இதற்கு முன் படங்கள் தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்க முடியாத வெற்று தயாரிப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே, முடிந்தால் நான் நடிப்பதை தடுத்து பாருங்கள்’ என்று சவால் விடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Don't u know that it is a collective decision which includes the person in your team,“Mr kathiresan” and the funds were used for the welfare works of the old/struggling members of the producers council that includes providing education, medical insurance and basic welfare during…
— Vishal (@VishalKOfficial) July 26, 2024