இணையதளத்தில் நடிகர் சங்க கணக்குகள். விஷால்

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில் நேற்று உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசினார்.
அவர் கூறியதாவது: நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் நடந்துள்ளதாகவும் தேவையில்லாமல் வழக்கு போட்டு பணத்தை செலவழிக்க வேண்டாம்.
நாங்கள் பொறுப்பு ஏற்றவுடன் நடிகர் சங்கத்தின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு, கடன் அடைத்த தொகை எவ்வளவும், மீதி வங்கியில் இருக்கும் இருப்புத்தொகை எவ்வளவு என்பதை நாளை பொருளாளர் கார்த்தி இணையதளத்தில் வெளியிடுவார். சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் தாராளமாக ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் தாங்கள் பொருப்புக்கு வருவதற்கு முன்னர் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.