சுயேட்சையை வெற்றி பெற செய்வேன்: விஷால் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டபோது விஷாலின் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் ஒரு பெரிய டிராமைவையே நடத்தினர். முதலில் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாகவும், பின்னர் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், பின்னர் மீண்டும் அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்படுவதாகவும் அறிவித்தனர். இதனால் தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று பெரும் பரபரப்பில் இருந்தது. தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து தலைமை தேர்தல் அதிகாரியை விஷால் சந்திக்கவிருப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய வேட்புமனு நிராகரித்தது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'என்னை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை. ஆளுங்கட்சி ஆட்கள் மிரட்டியதாக எனக்கு முன்மொழிந்த சுமதி, தீபன் என்னிடம் கூறினர். தேர்தல் ஆணைய முடிவின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
வேட்புமனுவை ஏற்பதாக சுயேச்சை வேட்பாளர்கள் பலர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி அறிவித்தார். அதற்கான விடியோ பதிவுகள் உள்ளன. இப்போது எமது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நிராகரித்தது ஜனநாயக கேலிக்கூத்து. ஆர்.கே.நகரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் ஒரு சுயேட்சை வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து அவரை வெற்றி அடைய செய்வேன்' என்று ஆவேசமாக விஷால் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com