கமல் மீது வழக்கா? காட்டமான விஷால்

  • IndiaGlitz, [Wednesday,May 23 2018]

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு காரணமாக 11 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது படுகாயம் அடைந்த நபர்களை நேரில் சென்று பார்க்கவும் இன்று காலை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தூத்துகுடிக்கு சென்றார்.

ஆனால் தூத்துகுடியில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவால் 4 பேர்களுக்கு மேல் கூட்டமாக செல்லக்கூடாது என்பது சட்டம். ஆனால் இந்த சட்டத்தை மீறி கமல், அரசு மருத்துவமனைக்கு கூட்டத்துடன் சென்று காயமுற்றவர்களை பார்த்ததாக அவர் மீது தூத்துகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்தவுடன் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளார் சங்க தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். தூத்துகுடியில் காயம் அடைந்த அப்பாவி பொதுமக்களை கமல் பார்க்க சென்றது தவறா? என்ன கொடுமை இது. ஒரு நடிகராக அரசியல்வாதியாக ஒரு சமூக அக்கறையுள்ள மனிதனாக இதை கூட செய்ய அனுமதி இல்லை எனில், கடவுள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்' என்று விஷால் கூறியுள்ளார். விஷாலின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் சமூகவலைத்தள பயனாளிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை கமெண்ட்டாக தெரிவித்து வருகின்றனர்.

 

More News

மீண்டும் துப்பாக்கி சூடு: தூத்துக்குடியில் ஒருவர் பலி

சுற்றுச்சுழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும்

கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு: தூத்துகுடி காவல்துறையினர் அதிரடி

தூத்துகுடியில் நடந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 11 பேர் பலியாகினர். பல அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கி சூட்டினால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயல்: தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த்

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வன்முறையால் போலீசார் துப்ப்பாக்கி சூடு நடத்தினர்.

தூத்துகுடியில் போலீஸ் வாகனம் எரிப்பு: மீண்டும் பதட்டம்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தால் 11 பேர் பலியான நிலையில்

எங்களுக்கு சுடுகாடு! உங்களுக்கு சட்டமன்றமா? நடிகர்களுக்கு கவிஞர் அறிவுமதி கேள்வி

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோலிவுட் திரையுலகின் கிட்டத்தட்ட முக்கிய நடிகர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில்