அடுத்த நிலைக்கு செல்கிறது விஷால்-வரலட்சுமி உறவுமுறை

  • IndiaGlitz, [Tuesday,June 28 2016]

நடிகர் சங்க செயலாளர் மட்டுமின்றி நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்வது, பள்ளி மாணவர்களுக்கு உதவி உள்பட பலவிதமான சமூக சேவை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் விஷால், தனது ஒரே குறிக்கோளாக நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். மேலும் கட்டிடம் கட்டிய பின்னர்தான் தனது திருமணம் நடைபெறும் என்றும் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்நிலையில் விஷாலும் சரத்குமார் மகள் வரலட்சுமியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. தற்போது இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. விஷால் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் வரலட்சுமியுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த புகைப்படம் அனைத்தையும் விளக்கும்' என்று பதிவு செய்துள்ளார்.
எனவே விரைவில் வரலட்சுமியுடன் தனது திருமணம் நடைபெறும் என்பதையே அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது. காதலர்கள் என்ற நிலையில் இருந்து கணவன் - மனைவி என்ற அடுத்த நிலைக்கு விரைவில் மாறவுள்ள இந்த ஜோடிக்கு இப்போதே பலர் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.