'எங்களுக்கு பிரச்சனை வந்தால் முதலில் நாடுவது கமல்ஹானைத்தான்' - விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல், த்ரிஷா உள்பட படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய 'தூங்காவனம்' நாயகி த்ரிஷா, எனக்கு ஒரு பெர்சனல் பிரச்சினை வந்தால் கமலிடம் தாராளமாக உதவி கேட்பேன். அவரும் கண்டிப்பாக உதவுவார் என்று கூறினார். இதன்பின்னர் பேசிய விஷால், 'நடிகர்களுக்கு நடிப்பை கற்று கொள்ளும் பல்கலைக்கழகம் உலகநாயகன் கமல் சார், அவர் ஒரு சிறந்த மனிதர் மட்டுமின்றி சமுதாயத்திற்க்காக தன்னை அதிகமாக ஈடு படுத்திகொண்டவர். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் நான் கமல் சாரை தொடர்பு கொண்டு அவரிடம் ஆலோசனை கேட்பேன்' என்று கூறினார்.
பிரபல இயக்குனர் அமீர் பேசியபோது, "கமல்ஹாசன் நடித்த, அவர் ரசிகர்களுக்கே அதிகம் தெரியாத கொல்லிமலை திருடன் என்ற திரைப்படத்தை 30 தடவை பார்த்தேன். அப்படியிருக்கும்போது தூங்காவனத்தை 300 தடவை பார்ப்பேன்' என்று கூறினார்.
பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி பேசும்போது, "25 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு கமல் நடித்த 3 படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக வேண்டும்' என்று கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments