11 ஆண்டுகளாக முடங்கியிருந்த விஷால் படம் ரிலீஸ் ஆகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

விஷால் நடித்த திரைப்படம் கடந்த 11 ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மத கஜ ராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரிலீசுக்கு 2013 ஆம் ஆண்டு தயாரான நிலையில் ஒரு சில பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதன் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டது.

சமீபத்தில் கூட ’அரண்மனை 4’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த படம் குறித்த கேள்விக்கு ’இந்த படத்தின் தயாரிப்பாளர் தி நகரில் தான் இருக்கிறார், அவரது முகவரி தருகிறேன், நீங்களே போய் கேளுங்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

7 மொழிகளில் த்ரிஷாவின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை த்ரிஷா தென் இந்திய திரை உலகில் பிசியான நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் நடித்த படம் நேரடியாக ஓடிடியில் 7  மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த துக்கம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல பாடகி உஷா உதுப் வீட்டில் நிகழ்ந்த சோக நிகழ்வை அடுத்து திரை உலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். 

'டீன்ஸ்' ரன்னிங் டைம்.. இன்னும் 4 விநாடிகள் குறைந்திருந்தால் சாதனையா இருந்திருக்குமா?

பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. பா ரஞ்சித் கேட்ட 7 கேள்விகள்.. தமிழக அரசு பதிலளிக்குமா?

தமிழக பகுஜன் சமாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்,

குக் வித் கோமாளி அன்ஷிதாவா இவர்? பக்தி பழமாக மாறிய புகைப்படம் வைரல்..!

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதா பக்தி பழமாக மாறிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள