நல்லதுல்ல என்னடா கெட்டது.. கெட்டதுல்ல என்னடா நல்லது.. 'மார்க் ஆண்டனி' டிரைலர்..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சுமார் மூன்று நிமிடங்கள் இருக்கும் இந்த ட்ரெய்லரில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா காட்சிகளை பார்க்கும்போது உடனே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷால் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். அவருக்கு இணையாக எஸ்ஜே சூர்யாவும் பல கெட்டப்புகளில் வருகிறார். மொத்தத்தில் இரண்டு பேரும் படத்தில் அதகளப்படுத்தி உள்ளனர். இடையில் சுனில் வில்லன் வேடத்தில் கலக்குகிறார்.

மேலும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை இதில் மீண்டும் உயிர் பெற வைத்துள்ளனர். மொத்தத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள், காமெடி காட்சிகள், ஜனரஞ்சகமான காட்சிகள் அடங்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் வில்லன், வில்லனா தான் இருப்பேன்.. நல்லதில்ல என்னடா கெட்டது, கெட்டதுல என்னடா நல்லது.. ஆகிய விஷால் வசனமும், பொம்பளை கேக்குதா பொம்பள.. கேங்ஸ்டருக்கு எல்லாம் டிசிப்ளின் வேணும் என்ற எஸ்.ஜே சூர்யா வசனமும், நம்ம பிளான் படி அவங்க ரெண்டு பேரையும் முடிக்கணும் என்ற சுனில் வசனமும் டிரைலரில் கவனம் பெறுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.

More News

பொணமே இன்னும் வீட்டுக்கு வரல்ல.. அதுக்குள்ள பணமா? விஜய் சேதுபதி வெளியிட்ட டிரைலர்..!

நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் 'ம்யிலாஞ்சி' என்ற திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

அஜித்தை மட்டும் மிஸ் செய்துவிட்டேன், ஆனால் அதுவும் விரைவில் நடக்கும்: ஷாருக்கான்..!

நடிகர் ஷாருக்கான் தனது சென்னை பயணத்தின் போது அஜித்தை மட்டும் பார்க்கவில்லை என்றும் ஆனால் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்கு பின் சந்திக்கும் காதலர்கள் முன்னா-ஹரிணி .. வைரல் வீடியோ..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' படத்தில் காதலர்களாக நடித்த  சித்தார்த் மற்றும் ஜெனிலியா 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உங்க பிரச்சனை தீர்றதுக்கு அதைவிட பிரச்சனையான இடத்துக்கு வந்துருக்கிங்க.. 'சந்திரமுகி 2' டிரைலர்..!

 ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

இன்ஸ்டாவில் நயன்தாரா ஃபாலோ செய்யும் 20 பேர்.. அதில் எத்தனை தமிழ் திரையுலகினர் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கினார் என்பதும் முதல் வீடியோவில் தனது உயிர் மற்றும் உலகு ஆகிய இரு மகன்களுடன் ஸ்டைலாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்