ஆன்மீக ஆக்சன் படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்!

  • IndiaGlitz, [Monday,August 05 2019]

அரசியல் உலகில் 'ஆன்மீக அரசியல்' என்ற புதுமையான ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்த நிலையில் தற்போது திரையுலகில் 'ஆன்மீக ஆக்சன்' என்ற புது டிரெண்டை இரண்டு பிரபலங்கள் அறிமுகம் செய்ய உள்ளனர். அவர்கள் விஷால் மற்றும் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் ஒரு ஆன்மீக ஆக்சன் திரைப்படம். சிவம் என்ற ஆன்மீக கதையை படித்த சமுத்திரகனி இந்த கதையில் விஷால் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் கதையை கூறியுள்ளார். விஷாலுக்கும் இந்த கதை பிடித்து விட, உடனே அந்த கதையை திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளாராம் சமுத்திரக்கனி. இதனை அடுத்து சமுத்திரக்கனி - விஷால் இணைந்து உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆன்மீக ஆக்சன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

3 முறை ஆஸ்கார் வென்ற கலைஞரிடம் வாழ்த்து பெற்ற 'இந்தியன் 2' டெக்னீஷியன்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சர்ச்சைக்கு பதில் சந்தோஷம்: 'கோமாளி' பட இயக்குனர்-தயாரிப்பாளர் விளக்கம்

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தின் டிரைலரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இருந்ததற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில்

லாஸ்லியா ஆட்டம் ஆரம்பமா? எதிராக திரும்பிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் செல்லக் குழந்தையாக ஆரம்பத்தில் கருதப்பட்டவர் லாஸ்லியா. அதனால்தான் அவருக்கு முதல் நாளிலேயே சமூக வலைதள பயனாளர்கள் ஆர்மியை தொடங்கினர்.

'சென்னையில் ஒரு நாள்' பாணியில் ஒரு செம்மையான த்ரில் சம்பவம்

சென்னையில் ஒரு நாள்' திரைப்படத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இதயமும் கொண்டு செல்லும் காட்சிகளை பார்த்திருக்கிறோம்.

தளபதியின் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்: எச்.வினோத்

'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்கள் மூலம் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் எச்.வினோத்,