கொரோனா பாதிப்பு குறித்து விஷால் பதிவு செய்த டுவீட்!

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி ஒருசில திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பாக அமிதாப்பச்சன் குடும்பத்தினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகியோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 20 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து அதன்பின் குணமாகிய செய்தி நேற்று வெளியானது

இந்த நிலையில் தனக்கும் தனது தந்தைக்கும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து விஷால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆம், எனது தந்தைக்கு முதலில் கொரோனா பாசிட்டிவ் இருந்தது உண்மைதான். அவரை கவனித்து கொள்ளும் பணியில் இருந்ததால் எனக்கும் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. எனது மேனேஜருக்கும் இதேபோன்று பாதிப்பு இருந்தது. நாங்கள் அனைவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டோம். ஒரே வாரத்தில் நாங்கள் முழு அளவில் குணடைந்து விட்டோம். தற்போது நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று விஷால் குறிப்பிட்டுள்ளார், கொரோனாவில் இருந்து குணமாகிய விஷால் மற்றும் அவரது தந்தைக்கு விஷாலின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட முன்னணி நடிகை: வைரலாகும் வீடியோ

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்பதும் கோடிக்கணக்கானோர் இந்த விளையாட்டுக்கு ரசிகர்கள் என்பதும் தெரிந்தது.

சோனியா அகர்வாலின் திருமண திட்டம் இதுதான்!

கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய விரும்புகிறாரா ஓவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் திரையுலகில் வாய்ப்புகள் பெறலாம் என்றும், வாய்ப்புகள் தானாகவே கொட்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடந்த மூன்று சீசன்களில் டைட்டில் பட்டம் வென்ற

ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'தெறி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

அமெரிக்க காவலில் சிக்கிக் கொண்ட சீனாவின் பெண் விஞ்ஞானி!!! தொடரும் பரபரப்பு???

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அமெரிக்கா சீனாவின் மீது குற்றம்சாட்டத் தொடங்கியதில் இருந்தே ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு பிரிவாக காட்சியளிக்கின்றன