டாக்டர் + துப்பாக்கி.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விஷால் - ஹரி படத்தின் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,November 27 2023]

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஷால் 34’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு போஸ்டரில் துப்பாக்கி மற்றும் டாக்டரின் ஸ்டெதஸ்கோப் இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’விஷால் 34’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ஹரி மற்றும் விஷால் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த போஸ்டரில் துப்பாக்கி மற்றும் டாக்டரின் ஸ்டெதஸ்கோப் உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தின் கதையை பல்வேறு விதமாக யூகித்து வருகின்றனர். ஒரு டாக்டர் சந்தர்ப்ப சூழ்நிலையால் துப்பாக்கியை எடுத்தால் என்னவாக இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று கணித்து வருகின்றனர். கௌதம் மேனன், சமுத்திரகனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.