'விஷால் 34' படத்தில் இணைந்த பிரபலம்.. ஹரியுடன் 5வது முறையாக இணைகிறார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விஷால் 34’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ’யானை’ என்ற திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து விஷால் உடன் ஹரி மீண்டும் இணைந்துள்ளார். ’தாமிரபரணி’, ’பூஜை’ ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக விஷால் - ஹரி கூட்டணி இணைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹரி இயக்கத்தில் உருவான ’ஆறு’ ’சிங்கம்’ ’வேங்கை’ ’சிங்கம் 2’ ‘சாமி 2’ உள்ளிட்ட படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Hit the drums 🥁
— Vishal Film Factory (@VffVishal) July 15, 2023
Elated to have the Rockstar @ThisisDSP on board #Vishal34 - get ready for some exciting music coming your way!#DSPjoinsVishal34 #ProductionNo14 @VishalKOfficial #Hari pic.twitter.com/tXePizXmJA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com