ஜிப் இல்லாம ஜீன்ஸ் போட்டேன், பேரு கெட்டு போச்சு.. விஷாலின் 'ரத்னம்' படத்தின் சிங்கிள் பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’டோன்ட் வொர்ரி’ என்று தொடங்கும் இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது கலக்கலாக இருப்பதால் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் சுகுமார் ஒளிப்பதிவில் ஜெய் படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே ’தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய படங்களில் இருந்த ஹரி - விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ’டோன்ட் வொர்ரி’ என்ற பாடலின் முதல் சில வரிகள் இதோ:
டோண்ட் வொர்ரி டோண்ட் வொர்ரி டா.. மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
சின்ன வயசில தாயை தொலைச்சு
கண்ணீரை மொத்தமா கொட்டி தீர்த்தாச்சு
ஒன்வேயில எதுக்கால ஓடுன வண்டி நான்
டிசைன் டிசைன்னா கஷ்டம் முட்டி பாத்தாச்சு
உப்பில்லாம சோறு தின்னேன் நாக்கு செத்து போச்சு
ஜிப் இல்லாம ஜீன்ஸ் போட்டேன் பேரு கெட்டு போச்சு
டப்பில்லாம நான் திரிஞ்சேன் நட்டுவிட்டு போச்சு
எல்லாம் தாண்டி வாழ முடியும் நானே அதுக்கு சாட்சி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com