'ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீங்க, அடிச்சு தூக்கிருவேன்'.. விஷாலின் 'ரத்னம்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிய ‘ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த ட்ரெய்லரின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் இதில் ஒரு நிமிடத்திற்கு மேல் அதிரடி ஆக்சன் காட்சிகள் தான் இருக்கின்றன என்பதும் விஷாலின் அதிரடி ஸ்டண்ட் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.
காதலி பிரியா பவானி சங்கரை காப்பாற்றுவதற்காக விஷால் எடுக்கும் அதிரடி அவதாரம் தான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து திருப்பதியை ஆந்திராவுக்கு பிரித்துக் கொடுத்த போது ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
’ஆந்திரா பார்டரை தாண்டி வரும் எந்த பஸ்ஸையும் விடக்கூடாது’ என சமுத்திரகனி ஆவேசமாக கூறுவதில் இருந்து அவர் தான் இந்த படத்தின் மெயின் வில்லன் என தெரிய வருகிறது. ’அந்த பொண்ணு என் உசுரு என் மூச்சு, அவள போய் அசிங்கப்படுத்தி இருக்க’ என்று ஆவேசமாக வசனம் பேசிக்கொண்டே வில்லனின் அடியாட்களை விஷால் அடித்து நொறுக்கும் காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
'நகரி இல்ல, சித்தூர் இல்ல, ஆந்திரா இல்ல, தெலுங்கானா இல்ல, எந்த ஊராக இருந்தாலும் தேடி வந்து செதுக்கிருவேன்’ என்ற விஷாலின் வசனம் அவரது ஆவேசமான கேரக்டரை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் கௌதம் மேனன் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் ’ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீங்க, அடிச்சு தூக்கிருவேன்’ என்று வில்லன்களிடம் பேசும் வசனமும் சுவாரசியமாக உள்ளது.
இறுதியில் ’போலீஸ் டிபார்ட்மெண்டில் யாருக்காவது மெடல் கொடுக்க வேண்டும் என்றால் அது நம்ம ரத்னத்துக்கு தாண்டா கொடுக்கணும்’ என்ற சமுத்திரக்கனி வசனத்துடன் டிரைலர் நிறைவடையும் நிலையில் இந்த ட்ரெய்லர் உண்மையாகவே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com