விஷாலுடன் 3வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்
- IndiaGlitz, [Monday,January 07 2019]
விஷால் நடித்த 'மதகஜராஜா', 'ஆம்பள' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுந்தர் சி, மீண்டும் விஷால் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இயக்குனர் சுந்தர் சி தற்போது சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சுந்தர் சி இயக்கவுள்ள ஒரு படத்தில் விஷால் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.