close
Choose your channels

விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட  சதீஷ் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்:  “லைஃப் இஸ் மேஜிக்”!!

Saturday, October 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”. பிளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து இப்பாடலை வெளியிட்டுள்ளனர். கேட்டவுடன் பிடிக்கும் வகையில், அனைவரும் முணுமுணுக்கும் அட்டகாச மெலடியாக அமைந்துள்ள இப்பாடல், ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள், முழுக்க முழுக்க பிளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடி திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் வெங்கி

காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment