உயிர் நண்பனை எதிரியாக்கிய விஷால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த்ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் டைட்டில் நவம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஷால், ஆர்யா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் ‘எனிமி’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷால் இந்த டைட்டில் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ‘என்னுடைய உற்ற நண்பன் ஆர்யா இப்போது எனது "எதிரி" என்றும், இந்த போரில் அவரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்திற்கு பின் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
It's final. My best friend @arya_offl is now my "ENEMY".We have no choice, except to fight it out in a battle of epic proportion. gonna be good. ?????? GB#ENEMY @anandshank @vinod_offl @MusicThaman @MiniStudio_ @mirnaliniravi @RDRajasekar @RIAZtheboss @baraju_SuperHit pic.twitter.com/9jQ0RjLIJz
— Vishal (@VishalKOfficial) November 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments